வரவேற்பு கடிதம்
அன்புள்ள ஓக்லஹோமா தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு:
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப்பா
சுவையோடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு........
எனத் தமிழ் பேசி, தமிழ் பாடி தமிழராய் வாழ்ந்து வரும் ஓக்லஹோமா தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது பணிவான வணக்கங்கள். கோடை வெப்பம் தணிந்து இலையுதிர் காலம் வழியாக பனிக்காலம் சென்றடையும்முன் மிதமான தட்பவெப்பத்தை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறோம். இந்த மகிழ்ச்சியான வேலையில் நம் வருடான்தரக் கூட்டமான இருபத்தி மூன்றாவது தமிழ்க் கூட்டம் இந்த மாதம் அக்டோபர் இருபத்தி இரண்டாம் தேதி சனிக்கிழமை தல்சா மாநகரில் கோலாகலமாக நடை பெற உள்ளது என அறிவிப்பதில் பெருமை அடைகிறோம்.
எப்போதும் போல் இந்த வருடமும் பெரும் திரளாக குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலை நிகழ்ச்சிகள் மற்றும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகளை தந்து பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளார்கள். இந்த வருடக் கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற புகழ் திருமதி. புனிதா ஏகாம்பரம் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். தமிழ் அறிஞரும் சிறந்த பேச்சாளருமான திருமதி. ஏகாம்பரம் நம் கூட்டத்தில் கலந்து கொள்வதில் மிக்க பெருமை கொள்கிறோம்.
கொடை வள்ளல்கள் வாரி வழங்கிய நன்கொடைகள் மூலம் இந்த வருடம் நம் கூட்டத்தை முற்றிலும் அனுமதி கட்டணமின்றி நடத்த முடிவெடுத்துள்ளோம். தமிழ் வளர்க்க மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் பொதுக்குழு உறுபினர்கள் அனைவரும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இருவருடங்களுக்கு ஒருமுறை நம் சங்கம் சார்பாக தமிழ் முல்லை விழா மலர் பிரசுரிப்போம், இந்தவருடம் இந்த தமிழ் முல்லை இதழை உங்கள் கைகளில் தவழ உதவிய அணைத்து உறுப்பினர்களுக்கும் மற்றும் இதில் கவிதை, கட்டுரை எழுதிய அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
இங்ஙனம்,
செயற்குழு உறுப்பினர்கள்
ஓக்லஹோமா தமிழ்ச் சங்கம்